குமார வெல்கமவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றினால் நிராகரிப்பு…

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால், தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து, தம்மை விடுவிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று(30) கொழும்பு மேல் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சி காலத்தில் குமார வெல்கம போக்குவரத்து அமைச்சராக செயற்பட்ட போது, இலங்கை போக்குவரத்து சபையில் உபதலைவர் பதவி ஒன்றை உருவாக்கி, அதில் தமது, நண்பர் ஒருவரை நியமித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்மூலம் அவர் இலங்கை போக்குவரத்து சபைக்கு 33 லட்சம் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

#rishma