குமார வெல்கமவிற்கு எதிராக வழக்கு தொடர பணிப்பாளர் நாயகம் வழங்கிய அனுமதி கடிதத்தை சமர்ப்பிக்குமாறு உத்தரவு…

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு எதிராக வழக்கு தொடர்வதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பெற்றுக் கொடுத்த அனுமதி கடிதத்தை சமர்ப்பிக்குமாறு கொழும்பு முதன்மை நீதவான் ரங்க திஸாநாயக்க இன்று(28) உத்தரவிட்டுள்ளார்.

குமார வெல்கம போக்குவரத்து அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு உப தலைவர் பதவியொன்றை ஸ்தாபித்து அதில் தனக்கு நெருங்கிய நபரொருவரை நியமித்து , அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.