பிரபு சாலமன் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் கும்கி 2 படத்தின் ஹீரோ யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிரபு சாலமன் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கும்கி’. இதில் விக்ரம் பிரபு நாயகனாகவும், லட்சுமி மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள்.
மேலும், தம்பி ராமையா, ஜோ மல்லூரி, அஸ்வின் ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது, இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் பிரபு சாலமன். கடந்த வருடமே 2017 ஹீரோ கதாபாத்திரத்தின் சிறு வயது ப்ளாஷ்பேக் காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில், படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கேரளாவில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் விஷ்ணுவும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வருகிறது. வெகு விரைவில் படத்தில் நடிக்கும் மற்றைய நடிகர்கள் மற்றும் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
