குரல் பதிவு செய்யும் நாடகங்களின் கட்டணம் அதிகரிப்பது இப்படித்தான்…

இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து குரல்மாற்று பதிவுடன் ஒளிப்பரப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் திரைப்படம் வர்த்தக நிகழ்ச்சிகாக அறவிடப்படும் வரி உடனடியாக நடைமுறைக்கு வரும் படி அதிகரிக்கப்பட்டுள்ளது.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்த வணிக அமைப்புகள் மற்றும் தாயாரிப்பாளர்களினால் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக தற்போது அறவிடப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக 30 நிமிடம் அல்லது அதற்கு குறைவான காலப்பகுதிக்கு சிங்களம் மற்றும் தமிழ் மொழிக்கு குரல் பதிவு செய்யப்படும் ஆகக்கூடிய 4 பிரிவுகளை கொண்ட தொலைக்காட்சி நாடகம் அல்லது திரைப்படத்திற்காக நாளாந்தம் ஒளிப்பரப்பப்படும் நிகழ்ச்சி நேரத்திற்கு தற்போது அறிவிடப்படும் கட்டணம் 90ஆயிரம் ரூபா 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊடகத்துறை அமைச்சு விரிவான கட்டணம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.