குருநாகல்-கண்டி பிரதான வீதியின் 7ம் மைல் கல்லிற்கு அருகில் வீதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்தப் பாதையுடனான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
அத்துடன் களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமை தொடர்பிலும் அவர் மக்களுக்கு தெளிவுபடுத்தியதுடன், மில்லக்கந்த பிரதேசத்தில் தற்போதும் சிறிதளவு வெள்ள நிலைமை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும், அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அந்தப் பிரதேசத்தைவிட்டு சென்று விடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.