(FASTNEWS|COLOMBO) – குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபி சியாப்தீனுக்கு எதிரான வழக்கு இன்று குருநாகல் நீதிமன்றத்தில் இன்று(25) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
அசாதாரண முறையில் சொத்து சேகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் வைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பயங்கரவாத அமைப்புக்களின் முன்னேற்றத்துக்கு நிதி உதவி செய்துள்ளதாக வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கு போதுமான சாட்சிகள் இல்லை என்று பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் துசித முதலிகே நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.