பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட ஐந்து தேரர்களுக்கு எதிராக உள்ள 02 வழக்குகள் இன்று(04) கொழும்பு கோட்டை நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09ம் திகதி கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பலவந்தமாக பிரவேசித்து குழப்பம் விளைவித்தமை மற்றும் புனித குர்ஆனை அவமதிக்கும் வகையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தமை ஆகிய வழக்குகளே இவ்வாறு இன்று(04) விசாரணைக்கு வந்திருந்தது.
இதன்போது, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர், சம்பவம் தொடர்பில் எதிர்வரும் வழக்கு நடவடிக்கை குறித்து நீதிபதியிடம் ஆலோசனை கோரியுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தனர். அதன்படி, குறித்த வழக்கானது எதிர்வரும் டிசம்பர் மாதம் 03ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றிற்கு அழைத்து வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.