சில குறிப்பிட்ட எண்ணெய்களைக் கொண்டு நீங்கள் உடல் எடையை தாரளமாக குறைக்கலாம் . இது நம் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுவதுடன், பசியை மட்டுப்படுத்துகிறது அதோடு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து உணவு செரிப்பதற்கு உதவுகிறது. இதனால் கணிசமாக உடல் எடை குறைந்திடும். குறிப்பாக தொப்பையை குறைப்பதற்கு இந்த எண்ணெய்கள் நிறையப் பயன்படுகிறது.
லெமன் ஆயில் :
இதில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது. உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்களையும், அதிகப்படியான கொழுப்பினையும் நீக்கச் செய்கிறது. அதோடு இதில் d-limonene உட்பட பல்வேறு விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்கள் அடங்கியிருக்கின்றன. காட்டனில் லெமன் ஆயிலை ஊற்றி நனைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை சாப்பிடுவதற்கு முன்னால் நுகர்ந்து பார்க்க வேண்டும். இப்படிச் செய்வதால் அதிகப்படியாக உணவு சாப்பிடுவதை தவிர்க்க முடியும். ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு சொட்டு லெமன் ஆயிலை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
க்ரேப் ஆயில் :
லெமன் ஆயிலைப் போன்றே க்ரேப் ஃப்ரூட் ஆயிலும் பல்வேறு உடல் நல நன்மைகளை வைத்திருக்கிறது. வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும். கொழுப்பை கரைக்க உதவிடும். பசியை மட்டுப்படுத்தச் செய்வதுடன் நம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்கிறது. குறிப்பாக தொப்பையை குறைக்க உதவிடும். க்ரேப் ஆயிலை தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.இவை உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். அரை ஸ்பூன் க்ரேப் ஆயிலுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தொப்பையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம்.
பட்டை எண்ணெய் :
இலவங்கப்பட்டை வாசனை பிடிக்குமென்றால் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். சர்க்கரையை அதிகமாக எடுத்துக் கொண்டாலும் உடல் எடை அதிகரிக்கும். இலவங்கப்பட்டை எண்ணெய் பயன்படுத்தி வந்தால் அதிகப்படியான சர்க்கரையை எடுக்க வேண்டும் என்று தோன்றாது. அதோடு உடலின் சர்க்கரையையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும். நீங்கள் சாப்பிடும் பழங்கள், டீ போன்றவற்றில் இரண்டு சொட்டு இந்த எண்ணெயை சேர்க்கலாம். ஒரு கப் சூடான தண்ணீரில் பட்டை எண்ணெய் இரண்டு சொட்டு அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பாட்டிற்கு முன்பாக குடிக்க வேண்டும்.
இஞ்சி ஆயில் :
பசியுணர்வினை கட்டுப்படுத்தும். சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதற்கும் அதிலுக்கும் சத்துக்கள் உடலில் சேர்வதற்கும் முக்கியப் பங்காற்றுகிறது. ஒரு கப் சூடான தண்ணீரில் மூன்று சொட்டு இஞ்சி எண்ணெயை கலந்து குடித்திடுங்கள்.
மிளகு ஆயில் :
உடல் எடையை குறைக்கும் உணவுப்பொருட்களின் பட்டியலில் மிளகு கண்டிப்பாக இடம் பெறும். அளவுகோலின்றி அதிகப்படியான உணவை எடுத்துக் கொள்கிறவர்களாக இருந்தால் மிளகு ஆயில் உங்களது அதீத பசியை கட்டுப்படுத்தச் செய்யும்.
ஆரஞ்ச் ஆயில் :
லெமன் ஆயிலைப் போன்றே தான் ஆரஞ்ச் ஆயிலும் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. அதைத் தாண்டி ஆரஞ்சு ஆயில் உங்களுடைய மனதை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
சாப்பாட்டிற்கு முன்பாக இந்த ஆயிலை நுகர்வது, சூடான நீரில் ஆரஞ்ச் ஆயிலை கலந்து குடிப்பது ஆகியவற்றை தொடர்ந்து செய்யலாம்.