குறும்படத்தில் நடிக்கும் விஜய் மகன் – வைரலாகும் டீசர்…

வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடிச் சென்ற விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது குறும்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

விஜய்யின் மகன் சஞ்சய் விரைவில் நடிகராக களம் இறங்குவார் என்று தகவல் வெளியானது.

அதை உண்மையாக்கும் வகையில் சஞ்சய் நடித்த குறும்படம் ஒன்றின் டீசர் வெளியாகி உள்ளது. தனது நண்பர்களுடன் இணைந்து தற்போது சஞ்சய் குறும்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

‘ஜங்‌ஷன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் 11 வினாடிகள் கொண்ட டீசர் வெளியிடப்பட்டுள்ளது.