குறைநிரப்புப் பிரேரணை குறித்த வாக்கெடுப்பு மீளவும் நடைபெறTள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று(19) நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
அண்மையில் அரசாங்கம் 55 மில்லியன் ரூபா செலவிற்கான குறைநிரப்புப் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து நிறைவேற்றியது.
எனினும், இது தொடர்பிலான வாக்கெடுப்பில் சர்ச்சை காணப்படுவதாகவும் பிழையாக வாக்குகள் கணிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவொன்றையும் சபாநாயகர் நியமித்திருந்தார்.
குறைநிரப்புப் பிரேரணை குறித்த வாக்கெடுப்பினை மீளவும் நடாத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றின் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தொடர்பில் 74/1/2 சரத்தின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கும் உரிமை நாடாளுமன்றிற்கே உண்டு.
இந்த விடயம் குறித்து நாடாளுமன்றில் வெறுமனே வாத விவாதம் செய்வதில் எவ்வித பயனுமில்லை என கரு ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்