குறைந்தபட்ச தண்டப்பணமாக 25,000 ரூபா அறவிடப்படுவது குறித்து மோட்டார் சைக்கிள் சங்கம் எதிர்ப்பு.. (PHOTOS)

போக்குவரத்து சட்டத்தை மீறுவது தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தண்டப்பணம் குறித்து ஜனாதிபதி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அகில இலங்கை மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த கோரிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது;

போக்குவரத்து சட்டத்தை மீறுவது தொடர்பிலான பாரிய 7 குற்றச்சாட்டுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 25,000 ரூபா தண்டப்பணமானது உண்மையில் வரவேற்கத்தக்கதாக இருப்பினும், அதிக வேகத்தில் வாகனத்தினை செலுத்துதல் மற்றும் இடப்பக்கத்தில் வாகனத்தை  முன் கொண்டு செல்லுதல் ஆகியவை நடைமுறைக்கு உகந்ததாக இல்லை என இலங்கை மோட்டார் சைக்கிள் சங்கம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து நெரிசல் மிக்க வீதிகளினூடாக பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள் இடப்பக்கத்தினால் முந்திப் பயணிப்பதால் உயிராபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு என்பதனை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதனை நாம் ஒருபோதும் நியாயப்படுத்த முற்பட மாட்டோம். என்றாலும், குறித்த 25,000 ரூபா தண்டப்பணமானது அதிகம் என்றே கூற முற்படுகிறோம்.

பொதுவாக ரூ.25,000 இலும் குறைந்த வருமானமுடைய மோட்டார் சைக்கிள் சாரதிகளின்  குடும்ப நிலை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்படவே வேண்டும். நாம் ஜனாதிபதியிடம் கோருவது வாகனங்களின் பெறுமதிக்கு ஏற்ப தண்டப்பணம் வசூலிக்கவே ஒழிய தண்டப்பணம் வேண்டாமென்றல்ல.

மேலும், ஒரு யோசனையினை முன்வைக்க முன்னர் மனிதாபத்துடன் குறித்த யோசனையினை நோக்க வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதமானது;

Displaying cma press release 24.11.2016-page-001.jpg