2016ம் ஆண்டு மார்ச் மாதம் 29 திகதி இடம் பெற்ற பிணை முறிகள் ஏலத்தின் போது, குறைந்த பெறுமதியில் விலை மனுவை சமர்ப்பிக்குமாறு, அப்போதைய நிதி அமைச்சராக இருந்த, ரவி கருணாநாயக்க அரச வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக இன்று(04) தெரிய வந்துள்ளது.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் குறித்த இந்த விடயம் வெளிக் கொணரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)