யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் ஒன்று பொலிஸாரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, 076 609 3030 என்ற இலக்கத்திற்கு குறித்த தகவல்களை வழங்குமாறு வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் பொலிஸ் அதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமக்கு தகவல் வழங்குபவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தாம் முழுமையான பொறுப்பை ஏற்பதாகவும் வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.