குற்றத்தை ஒப்புக்கொண்ட மிருக வேட்டையர்களுக்கு கிடைத்த தண்டணை!

நக்கீல்ஸ் வனப்பகுதியில் மிருகங்களை மிகவும் கொடுரமாக வேட்டையாடி அதனை பேஸ்புக் வலைத்தளங்களில் பதிவேற்றி மகிழ்ந்த வேட்டைக்காரர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இன்று அவர்களது வழக்கு பன்வில சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்கள் 6 பேரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து இவர்களுக்கு 175,000 ரூபாய் அபராதப் பணம் விதித்து நீதவான் எம்.எச்.ரபீக்டீன் தீர்ப்பளித்துள்ளார்.

பாதுகாப்பு வனப்பகுதியில் மிருகங்களை வேட்டையாடியமை, அதற்காக துப்பாக்கிகளை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளை சந்தேகநபர்கள் ஒப்புகொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு 25,000 படி இரண்டுகுற்றச்சாட்டுகளுக்காக 50,000 அபராதப் பணமும், ஏனைய சந்தேகநபர்களுக்கு தலா 25,000 அபராதப் பணமும் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.