ஷானி அபேசேகரவுக்கு இடமாற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகரவை பதவி நீக்கம் செய்து, அவரை காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவி அதிகாரியாக நியமிப்பதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பொலிஸ் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானம் நேற்று(21) மாலை பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.