குளத்தில் வீழ்ந்த கெப் வாகனம் – மூவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | முல்லைத்தீவு ) – முல்லைத்தீவு – வவுனத்தீவு குளத்தில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று வவுனத்தீவு குளத்தில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கெப் ரக வாகனம் ஒன்று குளத்தில் வீழ்ந்து மூழ்கியுள்ளது.

இதன்போது வாகனத்தின் சாரதியான 38 வயதுடைய நபரும் , இரண்டு வயதுடைய பெண்பிள்ளை ஒன்றும் 12 வயதுடைய ஆண்பிள்ளை ஒன்றும் நீரில் மூழ்கி காணால்போயிருந்தனர்.

அதிவேகம் காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்