பொகவந்தலாவ, லோய்னோன் தோட்ட பகுதியில் இன்று(29) 14 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை தேயிலைப் பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை, தேயிலை மலை அடிவாரத்தில் உள்ள குளவி கூடு கலைந்து வந்து தாக்கியுள்ளது.
இதில் இரண்டு ஆண் தொழிலாளர்களும் 12 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்