குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பேர் மருத்துவமனையில்…

பண்டாரவளை – எல்ல பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுள் வெளிநாட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில்,2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.