UPDATE – குளியாபிட்டிய, ஹெட்டிபொல உள்ளிட்ட பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம்…

(FASTNEWS | COLOMBO) – குளியாபிட்டிய, ஹெட்டிபொல பிங்கிரிய, தும்மலசுரிய,  ரஸ்னாயகபுற மற்றும் கொபேகனே ஆகிய பிரதேசங்களுக்கு மீளவும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த ஊரடங்குச் சட்டம் நாளை(14) அதிகாலை 04.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.