குளிர்கால ஒலிம்பிக் போட்டியையொட்டி, 8 ஆம் திகதி வடகொரியா பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக சி.என்.என். தெரிவிக்கிறது.
தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பமாகி 25 ஆம் திகதி வரை நடைப்பெறவுள்ளது. இந்த போட்டியில் அண்டை நாடான வடகொரியா பங்கேற்கிறது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டியையொட்டி, 8-ந் தேதி வடகொரியா பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக சி.என்.என். தெரிவிக்கிறது. குறித்த இராணுவ அணிவகுப்பின்போது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், ராக்கெட்டுகள் இடம்பெற உள்ளன. இது தனது படை பலத்தைக் காட்டி அமெரிக்காவை அச்சுறுத்துவதற்கு வடகொரியா மேற்கொள்ளப்போகிற முயற்சி என தகவல்கள் கூறுகின்றன.
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குகிற வல்லமை மிக்க ‘ஹவாசாங்-15’ ரக ஏவுகணைகள் டசன்கணக்கில் இராணுவ அணிவகுப்பில் இடம்பெற உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது கொரிய தீபகற்ப பகுதியில், படைகளை அமர்த்தியுள்ள அமெரிக்காவை மிரட்டுகிற வகையில் ஏவுகணை சோதனை ஒன்றையும் வடகொரியா நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.