குளிர்பானங்களில் சேர்க்கப்படும் மேலதிக சீனிக்கு வரி அறவிட சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பிற்கமைய, 100ml குளிர்பானத்திற்கு சேர்க்க வேண்டிய அதிகூடிய சீனியின் அளவு 6g ஆகும்.
அதற்கு மேலதிகமாக சேர்க்கப்படும் ஒவ்வொரு கிராம் சீனிக்கும் ஒரு ரூபாய் வரி அறவிட தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவித்திருந்தார்.
(rizmira)