குளோபல் லைப் ஸ்டைல் நிறுவனம் சுற்றிவளைப்பு

கொள்ளுபிட்டி டுப்ளிகேசன் வீதியில் அமைந்துள்ள “குளோபல் லைப்ஸ்டைல்” நிறுவனமானது  பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டது.

தமக்கு வழங்கப்பட்ட உறுதி மொழிக்கு அமைய வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நன்மைகள் கிடைக்காமையே குறித்த நிறுவனம் சுற்றிவளைக்கப்பட்டதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நிறுவனத்துடன் கொடுக்கல்,வாங்கல்களில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களே இந்த நிறுவனத்தை முற்றுகையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தையும் மீள வழங்கக் கோரியும்இவர்கள் கூச்சலிட்டவாறு குறித்த நிறுவனத்திற்கு முன்பாக அமர்ந்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குளோபல் லைப் ஸ்டைல் நிறுவனமானது சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டுவருவதாக சிங்கள ஊடகம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.