குள்ளர் பாத்திரத்தில் ஷாருக் கான்

நடிகர் ஷாருக் கான் திரைப்­ப­ட­மொன்றில் குள்­ள­மான பாத்­தி­ரத்தில் நடிக்­க­வுள்ளார். ஆனந்த் எல் ராய் இப் ­ப­டத்தை இயக்­க­வுள்ளார்.

தானு வெட்ஸ் மானு, தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ், ராஞ்­சனாஹ் திரைப்­ப­டங்­களை இயக்­கி­யவர் ஆனந்த எல் ராய். தனது அடுத்த படத்தில் ஷாருக் கானுடன் இணைந்து அவர் பணி­யாற்­ற­வுள்ளார்.

இது குறித்து ஆனந்த் எல் ராய் கூறு­கையில், “ஷாருக் கான் மிகச் சிறந்த மனிதர். பெரிய இத­யத்­தையும் கொண்ட புத்­தி­சா­லித்­த­ன­மான மனிதர் அவர்.

இப்­ ப­டத்தில் குள்ளர் பாத்­தி­ரத்தில் ஷாருக் கான் நடிக்­க­வுள்ளார். தற்­போது நாம் திரைக்­கதை தயா­ரிக்கும் கட்­டத்தில் உள்ளோம்” எனத் தெரி­வித்தார்.
இப்­ ப­டத்தின் கதை­யம்சம் குறித்து கேட்­ட­போது. “என்னைப் பொறுத்­த­வரை, 3 அடி ஒரு அங்­குலம் மாத்­திரம் உய­ர­மான ஒரு நபரைப் பற்­றிய கதை இது” என இயக்­குநர் ஆனந்த் கூறினார்.

இப்­ பாத்­தி­ரத்தில் நடிப்­ப­தற்கு தன்­னம்­பிக்­கை­யுள்ள ஒருவர் தேவை என்­பதால் இதில் ஷாருக் கான் நடிக்க வேண்டும் என தான் விரும்­பு­வ­தா­கவும் அவர் கூறினார்.

50 வய­தான ஷாருக் கான் நடித்த ஃபேன் திரைப்­படம் கடந்த 15 ஆம் திகதி வெளி­யா­கி­யது. ஷாருக் கான் இரட்டை வேடங்­களில் நடித்த இப் ­படம் வசூலில் எதிர்­பார்த்த அளவு வெற்றி பெற­வில்லை.

அவர் இறு­தி­யாக நடித்த பல திரைப்­ப­டங்கள் 100 கோடி இந்­திய ரூபா வசூலைக் கடந்­தன. ஆனால், ஃபேன் திரைப்­படம் அந்த இலக்கை அடை­வ­தற்குத் தடு­மா­று­கி­றது. தற்போது ராயீஸ் திரைப்படத்தில் ஷாருக் கான் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.