குழந்தைகளை வெறுப்படைய செய்யும் பெற்றோரின் செயல்கள்…

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளனர். ஆனால் அந்த அளவு கடந்த பாசம் கூட சில சமயம் வினையாகிவிடுகிறது. உங்கள் பாசமே குழந்தை உங்களை வெறுக்க காரணமாகிறது.

குழந்தைகளை ஒரளவு கண்டிப்பது சரி. எங்கே குழந்தை தவறான வழியில் சென்றுவிடுமோ என்று நினைத்து அதிகமாக கண்டித்து வைப்பது குழந்தைகள் மனதை புண்படுத்தும்.

வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் சிலர், தங்களது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது மிகவம் குறைவாகவே காணப்படுகின்றது. வீட்டில் இருக்கும் போது கூட வேலை வேலை என வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவதால், குழந்தைகள் பெற்றோர்களின் பாசத்திற்காக ஏங்கி போய்விடுகின்றனர்.

பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கு சண்டை போடாமல் அமைதியாக இருக்க சொல்லி தர வேண்டும். ஆனால் பெற்றோர்களுக்குள் உண்டாகும் சண்டைகள் மற்றும் பிறருடன் பெற்றோர்கள் போடும் சண்டைகள் குழந்தைகளை வெறுப்படைய செய்கிறது.

இரண்டு குழந்தைகள் இருந்தாலும், ஒரு குழந்தையை செல்லப்பிள்ளையாக நினைத்து வளர்ப்பது, அதிக அக்கறை காட்டுவது, அந்த குழந்தை என்ன கேட்டாலும் வாங்கி தருவது போன்றவை மற்றொரு குழந்தையை வருத்தப்பட வைக்கும். எனவே இரண்டு குழந்தைகளையும் சமமாக கவனித்துக்கொள்வது அவசியம்.