குழந்தையினை கடித்த நாய்க்கு மரண தண்டனை விதித்தது நீதிமன்றம்..

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஒரு குழந்தையை கடித்த நாய்க்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நாயிடம் கடிபட்ட குழந்தையின் பெற்றோர், இதுபற்றி பொலிசில் புகார் செய்தனர். அதன்படி, பொலிஸ் உதவி கமிஷனர் ராஜா சலீம், நாய்க்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். மனிதாபிமான அடிப்படையில் குறித்த இந்த உத்தரவை பிறப்பித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

நாய் செய்த தவறுக்காக, அதன் எஜமானர் ஜமீல் என்பவருக்கு ஏற்கனவே ஒரு வார ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவரும் அந்த தண்டனையை அனுபவித்து விட்டு வெளியே வந்துள்ளார். தற்போது, தனது நாய்க்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து அவர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

(rizmira)