Update – குழப்பநிலை காரணமாக கதிர்காமம் ஆலய அதிகாலைப் பூஜை தவறியது..

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஆலயத்தில் இன்று(22) அதிகாலை ஏற்பட்ட குழப்பநிலை தற்போது நிதான நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆலயம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக ஆலய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

update :- Tuesday, August 22, 2017 8.00 Am
———————————————————

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஆலயத்தின் அதிகாலைப் பூஜை இன்று(22) காலை நடைபெறவில்லை.

குறித்த ஆலயத்தின் கதவுக்கான திறப்பு, பஸ்நாயக்க நிலமேயிடம் இருந்த நிலையில், அதனை அவர் உரிய நேரத்தில் ஆலயத்துக்கு கொண்டு வரவில்லை என்று பூஜகர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் தாம் திறப்பை கொண்டுச் சென்ற போதும், பூஜகர்கள் கதவைத் திறக்கவிடாமல் தடுத்ததாக, பஸ்நாயக்க நிலமே குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் இரண்டு தரப்பிலும் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கதிர்காமம் ஆலயத்தின் அதிகாலைப் பூஜை நடைபெறாத சம்பவங்கள் வரலாற்றில் மிகவும் அரிதாகவே பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

 

(rizmira)