(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமானது இன்று(26) பிற்பகல் 03.00 மணிக்கு சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.
எனினும், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க பங்காளிக் கட்சிகள் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பாஸ்ட் நியூஸ் செய்திச் சேவைக்கு தெரிவித்திருந்தார்.
அவ்வாறு இருக்க சஜித் பிரேமதாசவுக்கு எதிராக செயற்பட்ட அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம் மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் சஜித் பிரேமதாசவுடன் சுமுகமாக கலந்துரையாடும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

