விசா அனுமதிப்பத்திரம் இன்றி குவைத்தில் வசித்து வரும் இலங்கையர்கள் வெளியேறுவதற்காக வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலம் இம்மாதம் 22ம் திகதியுடன் முடிவடைகின்றது.
குறித்த பொது மன்னிப்புக்காலப்பகுதியில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சுமார் 15 ஆயிரம் இலங்கை ஊழியர்கள் உரிய விசா அனுமதிப்பத்திரம் இன்றி குவைத்தில் தங்கியிருப்பதாக அமைச்சர் தலதா அத்துக்கோரள இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.