ஐ. எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்ப்பு பட்ட 5 பேர் கொண்ட ஒரு குழுவை கைது செய்ததாக குவைத் உள்துறை அமைச்சு இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
25 மற்றும் 33 வயதுகளுக்கு இடைப்பட்ட குவைத் நாட்டை சேர்ந்த வாலிபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐ. எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுத பயிற்சிகள் பெற்றுக் கொண்டதாகவும், சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் யுத்தங்களில் ஈடுபட்டதாகவும், அந்நாடுகளுக்கு ஆட்கள் அனுப்ப ஒழுங்குகள் மேட்கொண்டதையும் இவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.