(FASTNEWS|COLOMBO) குவைத்திற்கு தொழிலுக்காக சென்று பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகயிருந்த 57 பேர் இன்று(01) நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இவர்களுள் 48 பெண்களும் 9 ஆண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் குவைத் நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு அதிகாரிகள் இவர்கள் வீடுகளுக்கு செல்வதற்கான கொடுப்பனவுகளை வழங்கி வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றன.