கூக்குரலிடும் தேரர்கள் குப்பை கொள்கலன் பிரச்சினையில் மௌனிகளாக… –

(FASTGOSSIP | COLOMBO) – நீதிமன்றம் மற்றும் பொலிசுக்கு அச்சுறுத்தல் விடுத்த அதுரலிய ரதன தேரரை ஏன் கைது செய்யவில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று(25) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் தொடர்ந்தும் கூறியதாவது;

“இந்நாட்டில் உள்ள தலைவர்கள் முதுகெலும்பினை நேராக வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மொட்டுக் கட்சி என்னதான் கூறினாலும் அவர்களுக்கு தேர்தலில் வெற்றியடைய முடியாது. மேலும் சிறுபான்மை இன்றி ஆட்சியினைக் கைப்பற்ற முடியாது. நாம் தேசிய முன்னணியின் கீழ் எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுப்போம். அதில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அனைவரும் ஒன்றுபடுவார்கள்.

மேலும் குப்பை கொள்கலன்களை கொண்டு வந்தோர் கைது செய்யப்பட வேண்டும். எனினும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கூக்குரல் இடும் தேரர்கள் இந்தப் பிரச்சினையில் மௌனமாக இருக்கின்றனர். இதற்கு சுற்றுச்சூழல் அதிகார சபையின் முன்னாள் தலைவர்கள் சில இவற்றுக்கு பொறுப்புக் கூற வேண்டும்..” என தெரிவித்திருந்தார்.