கூடாரம் சரிந்த விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) – ராஜஸ்தானில் கூடாரம் சரிந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு மாநில அரசின் சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

காயமடைந்த சுமார் 50 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ராஜஸ்தான் அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் காயங்களின் தன்மைக்கேற்ப சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை இழப்பீடாக அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.