கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு டெலோ எதிர்ப்பு…

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கம் மீள் ஸ்தாபிக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளமைக்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோ எதிர்ப்பு தெரிவிப்பதாக, டெலோவின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. இவ்வாறு ஆதரவு வழங்கப்படும் விடயம் ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த மாதம் 2ம் திகதி கொழும்பில் கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு, மகிந்த ராஜபக்ஷ யாப்புக்கு விரோதமாக பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பது ஆராயப்பட்டதுடன், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு, அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்னதாகவே அதற்கு ஆதரவளிப்பதாக கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டமையானது, கூட்டமைப்பின் தீர்மானங்களுக்கு விரோதமானதும் மக்களதுஅபிலாசைகளை பாதிக்கக்கூடியதுமாகும்…”