கூட்டுறவு துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 03 மாதங்களில் தீர்வு…

கூட்டுறவு துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 03 மாதங்களில் தீர்வினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அண்மையில் அமைச்சில் கூட்டுறவு துறையில் உள்ள முன்னணி நிறுவனங்களுடனான ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

ஊழியர்களினதும் அமைப்புக்களிலும் தற்போது உள்ள பிரச்சினைகள், முன்வைக்கப்பட்டிருந்த யோசனைகள் குறித்து அவதானம் செலுத்திய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

குறித்த கலந்துரையாடலில் கூட்டுறவுத் துறை குறித்த நிறுவனங்கள் 14 கலந்து கொண்டிருந்தன.

இதன்போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இனது அழைப்பின் பேரில் கூட்டுறவுத் துறையினரின் பிரதிநிதிகள் தாம் முன்னோக்கும் பிரச்சினைகள் குறித்து ஒவ்வொருவராக அமைச்சரிடம் முன்வைத்துள்ளனர்.

 

#rishma