கூட்டு எதிர்கட்சியினரின் பாத யாத்திரையில் பெவித ஹன்ட அமைப்பும் கைகோர்க்கின்றது.

ஒன்றிணைந்த எதிர் கட்சி ஏற்பாடு செய்துள்ள பாத யாத்திரையில் தமது அமைப்பு கலந்து கொள்ளவுள்ளதாக பெவித ஹன்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் முறுதுட்டுவே ஆனந்த தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பாக பின்பற்றும் நடவடிக்கைகள் சம்பந்தமாக திருப்தியடைய முடியவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.