கூட்டு எதிர்கட்சி ஏற்பாடு செய்துள்ள மக்கள் போராட்ட பாத யாத்திரை 28 அன்று..

மக்கள் மீதான அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக கூட்டு எதிர்கட்சி ஏற்பாடு செய்துள்ள மக்கள் போராட்ட பாத யாத்திரை எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் இருந்து ஆரம்பிக்கும் இந்தப் பாத யாத்திரை ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளதாக கூட்டு எதிர்கட்சியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த பாத யாத்திரை மேற்கொள்ளப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாகவும் கொழும்பில் நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டினார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடப்பட்டமை, வரி அதிகரிப்பு, எட்கா ஒப்பந்த கைசாத்து, விவசாயிகளுக்கான நிவாரணம் குறைக்கப்பட்டமை, அரசியலமைப்பு பொறிமுறை மற்றும் அரசியல் பழிவாங்கல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த பாத யாத்திரை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சரியான பாதையில் அரசாங்கம் செல்ல வேண்டும் என்பதை நினைவூட்ட வேண்டிய தேவை தமக்கு உள்ளது எனவும் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டினார்.