ஒரு தனிக்குழுவாக செயற்படுவதற்கு, சபாநாயகரால் அனுமதி வழங்கப்படாவிடில், நாடாளுமன்றச் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்போம் என்று, கூட்டு எதிர்க்கட்சியினர் அச்சுறுத்தி வருவதாக, அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டு எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கை தொடர்பில், எந்தவித தீர்மானத்தையும் சபாநாயகர் அறிவிக்கவில்லை என்றும் தெரியவருகின்றது.