ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை அகற்ற அரசுக்கு கூட்டு எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு

கூட்டு எதிர்க்கட்சியினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிங்கு ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை அகற்ற ஒத்துழைப்பு வழங்குவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கூட்டு எதிர்க்கட்சியின் 50 உறுப்பினர்கள் இவ்வாறு ஆதரவளிக்க உள்ளனர்.
இதனால் விரைவில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் உத்தேச சட்ட வரைவு உருவாக்கப்பட உள்ளது.
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி  மஹிந்தவிற்கும் பிரதமருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயை ரத்து செய்வது குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளது.