விரைவில் பசில் ராஜபக்ச மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
திவிநெகும அபிவிருத்தி திட்டத்தின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் நாளையதினம் பசில் ராஜபக்சவிடம் விசாரணைகள் மேற்கொள்ள இருப்பதாக நிதி மோசடி விசாரணைபிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை விமல் வீரவன்சவின் பல குற்றச் செயல்கள் காரணமாக ஜூலை 26ம் திகதி பொலிஸ் நிலையத்தி்ல் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக பாத யாத்திரை நடாத்துவதற்கு முன்னர் கூட்டு எதிர்க்கட்சியின் பல உறுப்பினர்களை கைது செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.