கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியை சந்தித்துள்ளனர்.
பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள கொடுக்கல் வாங்கல் தொடர்பான பொறுப்பை, மத்திய வங்கியில் இருந்து நீக்குவதற்கு நிதியமைச்சர் எடுத்துள்ள தீர்மானம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று(17) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, விரிவான பேச்சுவார்த்தையின்றி அந்த யோசனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்ததாக கூறினார்.
இதுதவிர ஊழியர் சேமலாப நிதியத்தை தவறாக பயன்படுத்தி அந்நிதியின் வளர்ச்சியை தடுப்பதற்கும், அந்நிதிக்கு வரி அறவிட தீர்மானித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய வங்கியின் முன்னால் நேற்று(17) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.