கூட்டு எதிர்க்கட்சியின் பா.உறுப்பினர்கள் 06 பேருக்கு ஸ்ரீ.ல.சு.கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கை..

கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனை ஒன்று எதிர்வரும் வாரம் ஸ்ரீ.ல.சு.க.வின் மத்திய செயற்குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் அமைச்சர்களுக்கு இடையில் நேற்று முன்தினம்(22) இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, பிரசன்ன ரணதுங்க, ரஞ்சித் சொய்சா, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன, குமார வெல்கம மற்றும் திலும் அமுனுகம ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையினை தொடர்ச்சியாக விமர்சனம் செய்தல் மற்றும் கட்சியின் தீர்மானங்களை ஊடக முன்னிலையில் விமர்சித்தல் போன்றவை அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றங்களாகும்.

 

(rizmira)