கூட்டு எதிர்க்கட்சிக்கு மே தினக் கூட்டப் பேரணியை ஆரம்பிப்பதற்கான மைதானம் மறுக்கப்பட்டுள்ளதாகத் அக்கட்சியால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு நாரஹென்பிட்டி சாலிகா மைதானத்தை கூட்டு எதிர்க்கட்சியினர் ஒதுக்கியிருந்தனர்.
எனினும், மைதான நிர்வாகிகள் தற்போது மைதானத்தை வழங்க முடியாது என அறிவித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் தொழிற்சங்கப் பிரிவு செயலாளர் சோமவீர சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
மத்திய போக்குவரத்துச் சபையினால் சாலிகா மைதானம் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை மோட்டார் சேவையாளர் சங்கத்தினால் கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி சாலிகா மைதானம் பணம் செலுத்தி மே தினத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. மைதானத்திற்காக 12500 ரூபா செலுத்தப்பட்டுள்ளது.
எனினும், கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தை குழப்பும் நோக்கில் தற்போது திடீரென மைதானத்தை வழங்க, நிர்வாகம் மறுத்துள்ளதாக சோமவீர சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
மேலும், மைதானத்தை வழங்க முடியாது என எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.