கூட்டு எதிர்க்கட்சி நியமித்துள்ள நிழல் அமைச்சரவை அடுத்த வாரம் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.
அமைச்சுக்களை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள நிழல் அமைச்சர்கள் எதிர்காலத்தில் எப்படி செயற்பட வேண்டும் என்பது குறித்து இதன் போது கலந்துரையாடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி அண்மையில் நியமித்த நிழல் அமைச்சரவையின் நிழல் பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.
இதனை தவிர புத்தசாசனம் மற்றும் அரச பாதுகாப்பு ஆகிய துறைகளும் அவருக்கு ஒதுக்கப்பட்டன.எனினும் இந்த பதவிகளில் இருந்து முன்னாள் ஜனாதிபதி விலகிக்கொண்டார்.