கூட்டு எதிர்க்கட்சி புதிய அரசமைப்பு உருவாக்கல் வழிநடத்தல் குழுவிலிருந்து விலகல்..

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படும் வரை, புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள வழிநடத்தல் குழுவிலிருந்து ஒதுங்கியிருப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

மொனராகலையில் நடந்த நிகழ்வில் நேற்று(03) கலந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில்;

“..இந்த அரசு தேர்தலை நடத்தாது காலத்தை இழுத்தடித்துச் செல்கின்றது. தேர்தலை நடத்தாமல், அரசமைப்பை நிறைவேற்றுவதற்கு அரசு முயற்சிக்குமாக இருந்தால் நாம் அதனை எதிர்ப்போம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் வரையில் வழிநடத்தல் குழுவில் இருந்து ஒதுங்கியிருப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்…” என தெரிவித்திருந்தார்.

(rizmira)