கூந்தல் நீளமா வளரனுமா? அப்போ நீங்க இதெல்லாம் கட்டாயம் செய்தே ஆகனும்!!

ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் தங்கள் தலைமுடியில் அக்கறை காட்டுகிறார்கள் . அனைவருக்கும் தங்களின் முடி குறித்த பயம் இருக்கிறது.

தலை முடி உதிராமல் தவிர்ப்பதடன் இன்னும் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அதற்கு முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்க வேண்டும்.

கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான மற்ற எல்லாசத்துக்களையும் விட விட்டமின் சத்து தான் முடிக்கு அதிகமாக தேவைப்படுகின்றன. அதனை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

விட்டமின் பி :
பி விட்டமின்ஸ் என்றும் இதனைக் குறிப்பிடலாம். விட்டமின் (பி,பி1,பி2,பி3,பி5,பி6,பி7,பி9,பி12) அனைத்து விட்டமின்ஸ்களும் அடக்கம் . நாம் சுறுசுறுப்பாக இருப்பதற்கும், சருமம், நகம் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கும் பி விட்டமின்ஸ் மிகவும் அவசியமாகிறது. பி விட்டமின்ஸ் எடுத்துக் கொண்டதை நம்மால் சேமித்து வைக்க முடியாது. அவை சிறுநீரில் கரைந்திடும். முட்டை,நட்ஸ்,தானியங்கள்,காய்கறிகளில் அதிகப்படியான பி விட்டமின்ஸ் கிடைக்கும்.

பயோட்டின் :
ஆரோக்கியமான நீண்ட கூந்தல் வேண்டும் என்று விரும்புகிறவர்கள் பயோட்டினை மறக்க வேண்டாம். முடியின் வளர்ச்சியை துரிதப்படுத்தும் மிக முக்கியமான சத்துக்களில் பயோட்டினும் ஒன்று. இதனால் முடிக்கு தேவையான ப்ரோட்டீன் கிடைக்கும். காளான், அவகேடோ,முட்டை,பீனட் பட்டர்,சால்மன் மீன் போன்றவற்றில் பயோட்டின் அதிகமாக இருக்கிறது.

விட்டமின் இ :
விட்டமின்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முடியின் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமானதாக பார்க்கப்படுகிறது. பாதாம், அவகேடோ,ப்ரோக்கோலி போன்றவற்றில் அதிகப்படியான விட்டமின் இ இருக்கிறது. விட்டமின் ஈ போதுமான அளவு இருந்தால் மட்டுமே தலைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கப்பெற்று முடியின் வேர்கால்கள் வலுப்பெறும். விட்டமின் ஈ கேப்ஸூல் இரண்டை இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலந்து ஆயில் மசாஜ் கூட செய்திடலாம்.

இரும்புச்சத்து :
விட்டமினை தாண்டி மிகவும் அவசியமானது இரும்புச்சத்து.இரும்புச்சத்து முடியின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதுடன் அவற்றின் ஆரோக்கியத்திற்கும் உறுதிக்கும் துணை நிற்கின்றது. இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் முடி அதிகமாக கொட்டுவது,அதிக வறட்சியுடன் காணப்படும்.