கெட்டம்பே மைதானத்தில் குப்பை பொறுக்கிய மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேதின கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கெட்டம்பே மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்நிலையில் கண்டி கெட்டம்பே மைதானத்திற்கு இன்றைய தினம் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் இணைந்து மைதானத்தை சுத்தப்படுத்தியுள்ளனர்.

“சூழல் புனிதமானது” என்ற நிகழ்ச்சித்திட்டம் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வரலாற்று முக்கியத்துவமிக்க தலதா மாளிகையில் ஆரம்பமானது..

இந்த நிலையில் அந்த வேலைத்திட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி கெட்டம்பே மைதானத்தை சுத்தப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.