பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெம்பல் மைதானத்தில் இடம்பெறுவுள்ள நடைபெறவுள்ள நிகழ்வொன்றை முன்னிட்டு, வாகன போக்குவரத்து கட்டுப்பாடு அமுல் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாளை சனிக்கிழமை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரை கெம்பல் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வாகனம் செல்வதற்கான தடை அமுலில் இருக்கும்.
குறித்த பகுதியில் ஏற்படக்கூடிய வாகன நெரிசலை தவிர்த்துக்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
குறித்த பாதையை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள், மாற்று வழிகளை பயன்படுத்தி வாகன நெரிசலை குறைத்துக்கொள்ளுமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.