கிரிஸ் கெயில் (Chris Gayle) மற்றும் மாலன் சாமுவேல்ஸ் (Marlon Samuels) ஆகியோர் மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒருநாள் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒரு நாள் குழாமிற்காக இவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி செப்டம்பர் மாதம் 19 திகதி முதல் 29ம் திகதி வரை ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது..
இந்நிலையில் இங்கிலாந்து அணியுடனான மேற்கிந்திய ஒருநாள் அணி விபரம் நேற்று(21) அறிவிக்கப்பட்டுள்ளது.
அணி விபரம்:
1. சுனில் அம்ப்ரிஸ்.
2. தேவேந்திர பிஷூ.
3. மிகுயெல் கம்மின்ஸ்.
4. கிறிஸ் கெய்ல்.
5. ஜேசன் ஹோல்டர் (தலைவர் ).
6. கைல் ஹோப்.
7. ஷாய் ஹோப்.
8. அல்சாரி ஜோசப்.
9. எவின் லெவிஸ்.
10. ஜேசன் மொகமது.
11. அஷ்லே நர்ஸ்.
12. ரோவ்மன் பொவேல்.
13. மார்லன் சாமுவேல்ஸ்.
14. ஜெரோம் டெய்லர்.
15. கெஸ்ரிக் வில்லியம்ஸ்.