தில்லி டேர்டெவில்ஸ் அணியின் தொடர் தோல்விகளை அடுத்து அணியின் தலைவர் பதவியில் இருந்து கெளதம் கம்பீர் திடீரென விலகி உள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தில்லி அணி தொடர்ந்து 05 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியது. கொல்கத்தா அணியில் இருந்து தில்லி அணியில் இடம் பெற்ற கம்பீர் தலைவராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் தில்லி அணியின் தொடர் தோல்வியால் பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. தோல்விக்கு பொறுப்பேற்று தான் விலகுவதற்காக கம்பீர் நேற்று(25) அறிவித்தார். இதற்கு எந்தவித நிர்ப்பந்தமும் இல்லை என்றார்.
மேலும் அவர் கூறுகையில்;
“..எனது ஆட்டத்திறனும் சிறப்பாக இல்லை. தலைமை பதவிக்கான அழுத்தத்தை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. இதற்கு நான் தகுதியானவன் இல்லை. நான் கொல்கத்தா அணியில் ஆடிய போது வயது 28. தற்போது 36 வயதாகிறது. இதுவும் ஆட்டத்திறன் மங்கியதற்கு காரணமாக இருக்கலாம். தலைமைப் பதவியில் இருந்து விலகினாலும் மீதமுள்ள 08 ஆட்டங்களில் பங்கேற்பேன்..”