(FASTNEWS | COLOMBO)- கொட்டாஞ்சேனை – புளுமென்டல் பட்டுமக பிரதேசத்தில் ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவரை கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் 03 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 16 மற்றும் 20 வயதுக்குட்ப்பட்ட தெமடகொட மற்றும் கொட்டாஞ்சேனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களிடம் இருந்து மடிக்கணனி, கைபேசி, கைக்கடிகாரம், வெளிநாட்டு மதுபான போத்தல்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.